தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!! ஆனால் மாநிலத்திற்குள் யாருக்கும் வைரஸ் தாக்கம் இல்லை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 21, 2020, 5:45 PM IST
Highlights

அதாவது  வெளிநாடுகளிலிருந்தும்  வெளிமாநிலத்தில் இருந்தும்  வந்தவர்களுக்கே  கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது . ஆனால் இதுவரை தமிழகத்துக்குள் ஒருவருக்குக்கூட கொரோனா  வைரஸ் இல்லை என சுகாதாரத்துறை நிம்மதி தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது .  அதாவது தாய்லாந்தில்  இருந்துவந்த இருவருக்கும் நியுசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார்.   சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா  வைரஸ் அங்கு  வீரியும் குறைந்துள்ள நிலையில் ,  மற்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது . 

இந்நிலையில் இந்தியாவில் அதன் தாக்கம்  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.  ஆனாலும் அதை தடுக்க மத்திய மாநில அரசுகள்  பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில்  தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில்  நாளை 22 தேதி மக்களே முன்வந்து ஊரடங்கு நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென அரசுகள் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளன .   இந்நிலையில் தமிழகத்தில்  வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது . அதாவது ஓமன் நாட்டிலிருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை தமிழகத்தில் கொரோனா பாதித்த முதல் நபராக கருதப்படுகிறார்.   அவரைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து வந்த இருபது வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. மூன்றாவதாக அயர்லாந்து நாட்டில் இருந்து வந்த நபருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று நபர்களுக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் மூவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.  

தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்திற்கு  வந்த  இருவருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஆறாவதாக நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்த நபருக்கும்  கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது  வெளிநாடுகளிலிருந்தும்  வெளிமாநிலத்தில் இருந்தும்  வந்தவர்களுக்கே  கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது . ஆனால் இதுவரை தமிழகத்துக்குள் ஒருவருக்குக்கூட கொரோனா  வைரஸ் இல்லை என சுகாதாரத்துறை நிம்மதி தெரிவித்துள்ளது.  ஆகவே மக்கள் யாரும் இதை எண்ணி அஞ்ச தேவையில்லை எனவும்.  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நல்ல முறையில் இருப்பதுடன் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!