எடப்பாடி பழனிச்சாமி மனைவிக்கு கொரோனா..!! அதிர்ச்சியில் இபிஎஸ் தொண்டர்கள்.

By Ezhilarasan Babu  |  First Published Jun 28, 2022, 1:03 PM IST

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோடா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மனைவி ராதா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோடா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவரது மனைவி ராதா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி, இவரது மனைவியின் பெயர் ராதா, தனது கணவர் அதிமுகவில் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ள நிலையிலும் இதுவரை ஊடக  வெளிச்சம் படாமல் விலகியே இருந்து வருகிறார் ராதா. சாதாரண அரசியல் கட்சி தலைவர்களின் மனைவிமார்கள் கூட வெளியில் வரும்போது பாதுகாப்பு, தொண்டர்கள் என புடைசூழ வரும் நிலையில், எப்போதும் மக்களோடு மக்களாக  இருந்து வருகிறார்  ராதா.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: AIADMK : முடங்கிய இரட்டை இலை சின்னம்.. கதறும் ர.ரக்கள் - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சோகம் !

தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி என்பதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக எந்த இடத்துக்கும் தனியாகவே போய் வருபவராக அவர் இருந்து வருகிறார். தன் கணவர் முதல்வராக இருந்தபோது கூட அதுகுறித்து எந்த வித பகட்டும் காட்டிக் கொள்ளாத சாமானிய குடும்பத்தலைவியாகவே அவர்  இருந்துள்ளார். அரசியல் குறித்த விவகாரங்களில், அது தொடர்பான வேலைகளில் தலையிடாமல் சாதாரண குடும்பப் தலைவியாகவே அவர் செயல்பட்டு வருகிறார். 

இதையும் படியுங்கள்:  இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்

அவரது கணவர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர முழுநேர அரசியலில் சுற்றுச்சூழன்று வருவதால் வீடு மற்றும் விவசாய பணிகளை அவரை கவனித்துக் கொள்கிறார். இது ஒரு பறம் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தமிழகத்தில் வேகம் எடுத்து வருகிறது. பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கூட வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது. எனவே மீண்டும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராதாவுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டிருப்பதால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே எடப்பாடியாரின் உதவியாளர் உட்பட இருவருக்கு தோற்று உறுதியான நிலையில் தற்போது மனைவி ராதாவுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 
 

click me!