தமிழகத்தை மிரட்டும் கொரோனா... இன்று மட்டும் 5,871 பேர் பாதிப்பு: 119 பேர் பலி

Published : Aug 12, 2020, 06:39 PM IST
தமிழகத்தை மிரட்டும் கொரோனா...  இன்று மட்டும் 5,871 பேர் பாதிப்பு: 119 பேர் பலி

சுருக்கம்

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 633 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி