காட்டுத்தீயாக பரவும் கொரோனா.. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2600.. மாநகராட்சி அறிவிப்பு

By Ezhilarasan BabuFirst Published May 21, 2021, 1:51 PM IST
Highlights

தற்போது சென்னையில் மொத்தம் 2600 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 10 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்றுள்ள 850 இடங்களும், 6 நபர்களுக்கு மேல் தொற்றுள்ள 1750 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகரில் கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

கடந்த முறை ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், தெரு முழுவதும் அடைக்கப்பட்டு மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக, தற்போது ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

அதன்படி, தற்போது சென்னையில் மொத்தம் 2600 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 10 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்றுள்ள 850 இடங்களும், 6 நபர்களுக்கு மேல் தொற்றுள்ள 1750 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நபர்களுக்கு குறைவாக தொற்றுள்ள 6500 இடங்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!