சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை மாற்றியதே கொரோனா பரவலுக்கு காரணம்.. செல்லூர் ராஜூவின் அடடே கண்டுபிடிப்பு..!

Published : May 27, 2021, 04:07 PM IST
சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை மாற்றியதே கொரோனா பரவலுக்கு காரணம்.. செல்லூர் ராஜூவின் அடடே கண்டுபிடிப்பு..!

சுருக்கம்

எங்களுக்கு ஆட்சியில் வைரஸ் தொற்றை முழுமையாக நாங்கள் கட்டுப்படுத்தி வந்தோம். ஆனால் தற்சமயம் வைரஸ் தொற்று என்பது அளவுக்கதிகமாக இருந்து வருகிறது. வைரஸ் தொற்று க்கே இவர்களை பிடித்து போய் விட்டது அது தான் அளவுக்கு அதிகமாக தற்சமயம் பரவிக்கொண்டிருக்கிறது என கிண்டலாக தெரிவித்தார். 

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை மாற்றியதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ;- மதுரையில் கொரோனா 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அரிய பத்திரிக்கையில் பார்த்து வருவதாக விமர்சனம் செய்துள்ளார். 

இன்றைய முதல்வர் ஸ்டாலின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர், மேயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தவர். ஏற்கனவே நிர்வாகத்தை தெரிந்து கொண்டவர் தான். ஆனாலும் கடந்த காலத்தில் எங்களது அரசு அமைத்த  அதிகாரிகள் எல்லாம் வந்தவுடனே மாற்றிவிட்டனர். இதனால், மிகப்பெரிய பின்னடைவை ஏற்பட்டுவிட்டது. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை மாற்றியதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் என்றார். 

எங்களுக்கு ஆட்சியில் வைரஸ் தொற்றை முழுமையாக நாங்கள் கட்டுப்படுத்தி வந்தோம். ஆனால் தற்சமயம் வைரஸ் தொற்று என்பது அளவுக்கதிகமாக இருந்து வருகிறது. வைரஸ் தொற்று க்கே இவர்களை பிடித்து போய் விட்டது அது தான் அளவுக்கு அதிகமாக தற்சமயம் பரவிக்கொண்டிருக்கிறது என கிண்டலாக தெரிவித்தார். கொரோனா பாதித்தவர்களை குணமடையாமல் 3  நாட்களில் வீட்டுக்கு அனுப்பக் கூடாது எனவும் அரசுக்கு செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!