தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா... நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2020, 10:09 AM IST
Highlights

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

 மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,882 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5,757 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 4,683 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வேலூரில் 1023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தேனி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,722 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 2,470 ஆக உள்ளது. மாவட்டத்தில் 1945 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கன்னியாகுமரியில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

click me!