அடித்துத் தூக்கும் கொரொனா... தமிழகத்தில் முழு முடக்கமா? சுகாதாரத்துறை விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2021, 5:15 PM IST
Highlights

அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடு விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று தமிழக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அளித்த விளக்கத்தில், 'தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடு விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!