அய்யய்யோ.. மீண்டும் வேகம் எடுக்கிறது கொரோனா தொற்று.. மக்களே அலர்ட்டா இருங்க.. அலறும் ராதாகிருஷ்ணன்.

Published : Oct 23, 2021, 11:07 AM IST
அய்யய்யோ.. மீண்டும் வேகம் எடுக்கிறது கொரோனா தொற்று.. மக்களே அலர்ட்டா இருங்க.. அலறும் ராதாகிருஷ்ணன்.

சுருக்கம்

தற்போது மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நாமக்கல் மாவட்டத்தில் தோற்று சற்று அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும் அதேபோல் பண்டிகை காலத்திற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்றும், எனவே பொதுமக்கள் நோய்த்தொற்று நடவடிக்கைகளை முறையான பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் இன்று நடைபெறுகிறது. அந்த முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 18 வயது நிரம்பிய 32% பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள், அவர்களும் முகாம்களுக்கு வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும், 

அதே போல தமிழகம் முழுவதும் 1.4 கோடி முதியவர்கள் இருக்கும் நிலையில் அதில் 47 இலட்சம் பேர் தான் முதல் தவணை  தடுப்பூசியும், 27 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட்டு உள்ளனர். எனவே முதியவர்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். தற்போது மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நாமக்கல் மாவட்டத்தில் தோற்று சற்று அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் பண்டிகை காலத்திற்குப் பிறகு மீண்டும் வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே தமிழகத்தில் தவறாது நோய்த்தொற்று நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், ஒட்டுமொத்தமாக மாநில அளவில் கொரோனா தொற்று 1.1 இல் இருந்து 0.9 விழுக்காடு குறைந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 87 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தான், அதில் ஒன்பது சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், 4 சதவீதம் பேர்  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!