நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முழு ஊரடங்கு..!

By Thiraviaraj RMFirst Published Aug 25, 2021, 11:19 AM IST
Highlights

கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.  இதனை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் அங்கு 24, 296 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய் பாதித்த 173 பேர் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மொகரம் மற்றும் ஓணப்பண்டிகையையொட்டி இந்த ஊரடங்கில் அரசு  தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்தது.  வரும் ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில், ’’கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.  இதனை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது. பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

click me!