கேடி ராகவன் பாலியல் விவகாரம்..! கமலாலயத்தை உலுக்கும் உள்ளடி வேலைகள்..! பின்னணி என்ன?

Published : Aug 25, 2021, 10:42 AM IST
கேடி ராகவன் பாலியல் விவகாரம்..! கமலாலயத்தை உலுக்கும் உள்ளடி வேலைகள்..! பின்னணி என்ன?

சுருக்கம்

அண்ணாமலைக்கு எதிராக கமலாலயத்தில் ஒரு டீம் உருவானதாகவும், அந்த டீம் கே.டி.ராகவன் சொல்வதை கேட்டு நடந்து வந்ததாகவும் கூறுகிறார்கள். அத்தோடு ராகவன் டீம் அண்ணாமலைக்கு எதிராக தனது ஊடகத் தொடர்புகளை பயன்படுத்த ஆரம்பித்தது தான் சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

கோஷ்டி மோதலையும் காங்கிரசையும் எப்படி பிரித்து பார்க்க முடியாதோ அதே போலதான் தமிழக பாஜகவையும் பாலியல் சில்மிஷங்களையும் பிரித்து பார்க்க முடியாது என்கிறார்கள் அக்கட்சியின் இளம் தலைமுறை நிர்வாகிகள் சிலர்.

கடந்த ஜூன் மாதமே தினமலர் இந்த விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது. தமிழக பாஜக நிர்வாகிகள் மீது சுமார் 130 பாலியல் புகார்கள் வரை நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரிக்க விரைவில் விஷாகா குழு அமைக்கப்படலாம் என்று அப்போதே தினமலர் தெரிவித்திருந்தது. தற்போது தினமலர் கூறியது போலவே, தமிழக பாஜக சார்பில் விஷாகா குழு அமைக்கப்பட்டு மலர்க்கொடி எனும் பாஜக மாநிலச் செயலாளர் குழுவிற்கு தலைவராகியுள்ளார். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, மத்தியில் பாஜக எப்போது எல்லாம் ஆட்சியில் உள்ளதோ அப்போது எல்லாம் தமிழக பாஜகவில் பதவிகளுக்கு போட்டியிருக்கும் என்கிறார்கள்.

இதற்கு காரணம் அதிகாரம் மட்டும் அல்ல பணம் மற்றும் பொறுப்புகள் என்கிறார்கள். அதிலும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் பாஜகவில் ஆர்வமாக சேரும் போது அவர்களை நிர்வாகிகள் தவறாக பயன்படுத்துவது தொன்று தொட்டு நடந்து வருவதாகவே சொல்லப்படுகிறது. அதிலும் கடந்த 2014க்கு பிறகு தமிழக பாஜகவில் பெண் நிர்வாகிகளை பாலியல் தேவைகளுக்கு சில நிர்வாகிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்றே சொல்கிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே சில முறை அங்கு பஞ்சாயத்து நடந்துள்ளது என்றும் அப்போது செட்டில்மென்ட் மூலமாக அது மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இப்போது கேடி ராகவன் சிக்கியிருப்பது பாஜகவின் உள்ளடி வேலை தான் என்று அவரது ஆதரவாளர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். எல்.முருகன் மத்திய அமைச்சரான பிறகு தமிழக பாஜக தலைவராகும் கனவில் இருந்தவர் கே.டி.ராகவன். ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையை பாஜக தலைவராக்கியது. இதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக கமலாலயத்தில் ஒரு டீம் உருவானதாகவும், அந்த டீம் கே.டி.ராகவன் சொல்வதை கேட்டு நடந்து வந்ததாகவும் கூறுகிறார்கள். அத்தோடு ராகவன் டீம் அண்ணாமலைக்கு எதிராக தனது ஊடகத் தொடர்புகளை பயன்படுத்த ஆரம்பித்தது தான் சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

இதனிடையே மதன் ரவிச்சந்திரன் வீடியோவுடன் வந்த போது அது குறித்து அண்ணாமலை உடனடியாக பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். மேலும் தொடர்ந்து மதன் அந்த வீடியோ பற்றி கேட்டுக் கொண்டே இருக்க அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வீடியோவை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று அண்ணாமலை வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய பதில் தான் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!