அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை அசரடித்த முதல்வர்... எடப்பாடியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

Published : Jun 24, 2020, 04:57 PM ISTUpdated : Jun 24, 2020, 07:08 PM IST
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை அசரடித்த முதல்வர்... எடப்பாடியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

சுருக்கம்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்நிலையில், அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-  அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதேசமயம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அதனை 2021-ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்காக முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!