இந்து மக்கள் ஒருங்கிணைய வேண்டியது கட்டாயம்... அவசர அழைப்பு விடுக்கும் ஹெச்.ராஜா..!

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2020, 4:45 PM IST
Highlights

தமிழக கோவில்களின் அவல நிலை என்கிற பெயரில் இந்துக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக கோவில்களின் அவல நிலை என்கிற பெயரில் இந்துக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், ‘’மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் போகிற பாதையில் அடியமங்கலம் என்ற ஊரில் ஐயனார் கோவில் உள்ளது. அதற்கு அருகே இருந்த நிலங்களின் இடையே ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது இதற்கு வெகுகாலமாக பூஜை நடக்கிறது. அங்கு கோவில் இருந்தது என்பது அந்நில ஆவணத்திலேயே தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல அங்கே சிதிலமடைந்த கோவில் தூண்கள்,சில கல்வெட்டுகள், சூரியன் மற்றும் யோக நரசிம்மர் சிலைகள் வேறு கிடைத்துள்ளது. அவற்றை அங்குள்ள ஐயனார் கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். இப்போது பிரச்சனை அந்த நிலத்தை கிருசவ மிஷனரிகள் வாங்கியிருக்கிறார்கள். அந்த நிலத்தில் கோவிலே இல்லை என்று வாதிட்டு அந்த சிவலிங்கத்தையும் அப்புறப்படுத்த அனைத்து வழியையும் பார்க்கிறார்கள்.

மிகப்பெரிய ஆதீனங்களும், புண்ணிய ஷேத்திரங்களுக்கும் இடையில் இருந்த கோவிலே இப்படி தடம் தெரியாமல் அழிக்கப்படுவது வேதனைக்குரியது.
இந்துக்களின் வழிபாட்டிற்கும், அவர்களது கோவில்களுக்கு பாதுகாப்பும் தமிழகத்திலேயே இல்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. தயவு செய்து இந்து மக்கள் இதை ஒருங்கிணைப்போடு மீட்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமல்ல தொல்பொருள் துறைக்கு வேண்டுகோள் விடுத்து அதன் காலத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டியது மிக முக்கியமானது.

 

அந்த யோக நரசிம்மர், சூரியன் சிலையின் தோற்றத்தை பார்த்தால் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டு போல தெரிகிறது.எப்படியும் 900 வருடங்களுக்கு பழமையான சிலைகள் போலவே உள்ளது. உடனே விரைந்து செயல்பட்டு கோவிலை மீட்க வாருங்கள்’’எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!