ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா... அதிரும் நாடாளுமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 9, 2022, 4:23 PM IST
Highlights

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன்பிறகு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்தது. தினசரி 1 லட்சத்திற்கு மேலானோருக்கு பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 1,409 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 402 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதிக்குட்பட்ட காலகட்டத்தில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தைத் தொடலாம் என ஆய்வுகள் வெளியாகியுள்ளது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

click me!