கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்... பிரஷாந்த் கிஷோரின் ஊழியர்கள் 40 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 3, 2020, 5:52 PM IST
Highlights

மற்ற பணியாளர்களுக்கு கொரோனா திற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சென்னையில் உள்ள ஐபேக் நிறுவன அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

திமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் வேலை செய்யும் 40 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டுள்ளதால் தேர்தல் வியூக பணிகள் முடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று ஆட்டிப்படைக்கிறது. பல நாட்டு பிரதமர்கள், ஜனாதிபதிகள், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர். 

அதையும் மீறி மக்கள் பணியாற்றிய திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். ஒன்றிணைவோம் வா என திமுக முழக்கமிட்டதால் திமுகவை சேர்ந்தவர்கள் மக்களை சந்தித்து அதிமுக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் கொடுப்பது, போராட்டம் நடத்துவது என கும்பலாக அவ்வப்போது திரண்டு வந்தனர். இது ஒருபுறமிருக்க, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் வியூகம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஐபேக் நிறுவனம் களப்பணியாற்றி வருகிறது. 

சர்வே, களப்பணி என மக்களோடு மக்களாக அவர்கள் பணியாற்றி வருவதால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற பணியாளர்களுக்கு கொரோனா திற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சென்னையில் உள்ள ஐபேக் நிறுவன அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

click me!