MLAக்களை தொடர்ந்து எம்.பி.க்களை மிரட்டும் கொரோனா.. மயிலாடுதுறை திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று உறுதி.!

By vinoth kumarFirst Published Aug 3, 2020, 5:02 PM IST
Highlights

மயிலாடுதுறை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

மயிலாடுதுறை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் என பலரும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த மயிலாடுதுறை தொகுதி மக்களைவை உறுப்பினர் செ.ராமலிங்கமும் இணைந்துள்ளார். 

 

இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கடந்த சில நாட்களாகவே சளி தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சந்தேகமடைந்த அவர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் திமுகவும், மற்ற இருவரும் திமுக கூட்டணி சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!