Covid19: ஒரே பள்ளியில் 107 பேருக்கு கொரோனா.. அதிகரித்தால் பள்ளி-கல்லூரிகள் மீண்டும் மூடல்.. அமைச்சர் தகவல்.!

By vinoth kumarFirst Published Dec 7, 2021, 6:47 AM IST
Highlights

இந்தியாவில் முதன் முறையாக ஒமிக்ரான் தொற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 பேருக்கு  ஏற்பட்டது கண்டறியபட்டது. அவர்களில் ஒருவர் அரசு மருத்துவர். அந்த மருத்துவரும் அவருடன் தொடர்பில் இருந்து 5 பேரும் ஒரு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அரசு மருத்துவர்கள் ஆவார்கள்.

ஒரே பள்ளியில் 11 ஆசிரியர்கள் உட்பட 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டம் ஆடியது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது.  இந்நிலையில், தென் ஆப்பரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய ரக உருமாறிய கொரோனா வைரஸை கவலையளிக்கும் விஷயமாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது.  டெல்டா வைரஸை விட வீரியம் அதிகம் கொண்ட இந்த வைரஸ், வேகமாக பரவும் என்று கருதப்படுவதால், இந்தியா மற்றும் இதர நாடுகளில் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன் முறையாக ஒமிக்ரான் தொற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 பேருக்கு  ஏற்பட்டது கண்டறியபட்டது. அவர்களில் ஒருவர் அரசு மருத்துவர். அந்த மருத்துவரும் அவருடன் தொடர்பில் இருந்து 5 பேரும் ஒரு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அரசு மருத்துவர்கள் ஆவார்கள்.மேலும், மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட இந்த ஆறு பேருக்கும், லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பாராசிடாமல் மாத்திரைகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் கொரோனா அறிகுறிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பரவுவதால், அனைத்து மாநிலங்களிலும் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்க அந்தந்த மாநில அரசுகள் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 69 மாணவர்களுக்கு கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்,  மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதனால் ஒரே பள்ளியில் 107 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 11 ஆசிரியர்களும் அடங்கும். அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள கர்நாடகாவில், ஒரே பள்ளியில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் பொதுக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் பள்ளி-கல்லூரிகள் மூடப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.

click me!