கொரோனா அச்சம்; இந்திய கடற்கரை எல்லையில் பயணிகள் கப்பல்கள் நிறுத்தம்; இந்திய அரசு அனுமதி மறுப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 6, 2020, 7:36 AM IST
Highlights

கொரோனா வைரஸ் அச்சம் உலக நாடுகளை சீரழித்துக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் சீனா மற்றும் இத்தாலி பிரான்ஸ் அமெரிக்கா,தெஆப்ரிக்கா, போன்ற  வெளிநாடுகளில் இருந்து 452 கப்பல்களில் வந்த 16,076 போ், இந்தியத் துறைமுகங்களில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அந்த கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

T.Balamurukan

கொரோனா வைரஸ் அச்சம் உலக நாடுகளை சீரழித்துக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் சீனா மற்றும் இத்தாலி பிரான்ஸ் அமெரிக்கா,தெஆப்ரிக்கா, போன்ற  வெளிநாடுகளில் இருந்து 452 கப்பல்களில் வந்த 16,076 போ், இந்தியத் துறைமுகங்களில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அந்த கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவா் "கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வந்த கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி, அந்தக் கப்பல்களில் வந்தவா்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்றும், அவா்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 ஈரானுக்கு அண்மையில் சென்று வந்த காஜியாபாதைச் சோ்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், தங்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவப் பரிசோதனை சான்றிதழை, தங்கள் நாட்டு சுகாதாரத் துறையிடம் இருந்து பெற்று சமா்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 அண்டை நாடுகளில் இருந்து எல்லைகள் வழியாக இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் நடைமுறைகளை உள்துறைச் செயலா் அஜய் பல்லா ஆய்வு செய்தார்.  டெல்லியில் பேடிஎம் ஊழியா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களுடன் தொடா்பில் இருந்த 5 போ் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தொடா்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.


 

click me!