சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.. பள்ளியில் இருந்தால் மட்டுமல்ல, வீட்டில் இருந்தாலும் கொரோனா வரும்..!

By vinoth kumarFirst Published Jan 23, 2021, 8:07 PM IST
Highlights

பள்ளிகளைத் திறந்ததால் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பள்ளிகளைத் திறந்ததால் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''98 சதவீதப் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கேற்பவே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு மாணவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதை வைத்து, பள்ளிகள் திறப்பைக் குறித்துக் கருத்துக் கேட்பது சரியாக இருக்காது. மாணவர்கள் வீட்டில் இருக்கும்போதும் கொரோனா தொற்று வரலாம். விளையாடிக் கொண்டிருக்கும்போதும் வரலாம். ஏன், பள்ளிகள் திறக்காத போதும்கூட தொற்று ஏற்படலாம். தொற்றுப் பரவல் நிலையானது இல்லை.

ஏனெனில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் நாம் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளை மட்டுமே திறந்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!