அதிர்ச்சி செய்தி.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் தம்பி கொரோனாவால் உயிரிழப்பு..!

Published : May 11, 2021, 05:22 PM IST
அதிர்ச்சி செய்தி.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் தம்பி கொரோனாவால் உயிரிழப்பு..!

சுருக்கம்

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தம்பி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தம்பி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், கமலுக்கும், வானதி சீனிவாசனுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில்  1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். 

இதையடுத்து வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற பேரவையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஒரு பக்கம் வானதி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்துகொண்ட மகிழ்ச்சியாக தருணத்தில்  மறுபக்கம் துக்க செய்தியும் வெளிவந்துள்ளது.

 

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என் தன்பு தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான். ஓம்சாந்தி. என்று துக்கமுடன் தெரிவித்திருக்கிறார். வானதி சீனிவாசனின் தம்பி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?