கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு... நிலைகுலைந்து போன முதல்வர்.. சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..!

By vinoth kumarFirst Published Nov 1, 2020, 7:59 AM IST
Highlights

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாணத்துறை அமைச்சர் துரைக்கணஙணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாணத்துறை அமைச்சர் துரைக்கணஙணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான  செய்தியை அறிந்து நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.  துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. அமைச்சர் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவந்தவர். துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என ஆளுநர் இரங்கல் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏற்கனவே கொரோனாவால் அன்பழகன், வசந்தகுமார் ஆகியோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!