குடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..!

Published : Oct 31, 2020, 11:07 PM IST
குடிமகன்களுக்கு  வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..!

சுருக்கம்

நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மதியம் 12மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் தமிழ்நாடு வாணிபகழகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மதியம் 12மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் தமிழ்நாடு வாணிபகழகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, கடந்த மே மாதம் முதல் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் டோக்கன் முறைப்படி குடிமகன்களுக்கு மதுபானப்பாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டன.காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நண்பகல் 12.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் இதுவரை திறக்கப்படவில்லை. நாளை முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 200 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

45+ வாக்கு வங்கி... புதிய கூட்டணியால் ஏறுமுகத்தில் அதிமுக..! 2021 தேர்தல் சொல்லும் அரசியல் கணக்கு..!
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிட நான்.. என்னை ஒன்றும் செய்யாது..! மு.க.ஸ்டாலின் பெருமிதம்