அமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா... தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பெஞ்சமின்..?

By vinoth kumarFirst Published Jun 19, 2020, 11:35 AM IST
Highlights

ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமினின் கார் ஓட்டுநர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததையடுத்து  தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமைச்சரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமினின் கார் ஓட்டுநர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததையடுத்து  தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமைச்சரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் போலீசார், போலீசார். எம்எல்ஏக்கள், அமைச்சர்களும்  தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், அரசு கவலையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், அமைச்சர் பி.பெஞ்சமினின் கார் ஓட்டுநருக்கு கடந்த சில நாட்களாக நோய் தொற்றுக்கன அறிகுறிகள் இருந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீரானதையடுத்து அவரை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், கடந்த 5 நாட்களுக்கு முன்பு அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இவர் தான் ஓட்டுநராக இருந்துள்ளார். ஓட்டுநருக்கு தொற்றை ஏற்பட்டுள்ளதையடுத்து 2 நாட்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அமைச்சர் பெஞ்சமினின் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அவரும் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!