கொரோனா கோரப்பிடியில் சிக்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு... பீதியில் அரசியல்வாதிகள்..!

Published : Sep 13, 2020, 10:38 AM IST
கொரோனா கோரப்பிடியில் சிக்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு... பீதியில் அரசியல்வாதிகள்..!

சுருக்கம்

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா எதிரான போரில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கே.தங்கவேலு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!