கொரோனாவின் கோரப்பிடியில் தென்மாவட்டங்கள்... தில்லாக ஆய்வு செய்ய கிளம்பும் முதல்வர் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Aug 3, 2020, 1:03 PM IST
Highlights

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் ஆய்வு செய்ய உள்ளார். 

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் ஆய்வு செய்ய உள்ளார். 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களான விழுப்புரம், மதுரை, தேனி, நெல்லை, திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 5,875 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. 4,132 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டுமே 10,1951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கொரோனா வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குகிறார். ஏற்கனவே கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொரோனா குறித்து முதல்வர் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!