21 மாவட்டங்களில் வேகமெடுத்தது கொரோனா.. குழந்தைகளுக்கு 25% படுக்கைகள் தயார். அலாரம் அடிக்கும் ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2021, 12:43 PM IST
Highlights

தமிழகத்தை பொறுத்தவரையில் மரபியல் ரீதியில் இரண்டு வித்யாசங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தபட்டது. அதே போல் மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கொரொனா 3 அலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் ஒரு வார கால விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு தேவையற்ற பீதி அடைய தேவை இல்லை என்ற அவர், 15 லிருந்து  21 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மார்க்கெட் பகுதிகள் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களை கவரும் வகையிலான பிரச்சார உக்திகளை கையாள உள்ளோம் என்றார். தமிழகத்தை பொறுத்தவரையில் மரபியல் ரீதியில் இரண்டு வித்யாசங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தபட்டது. அதே போல் மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வேளை மூன்றாம் அலை வந்தாலும் 25 விழுக்காடு படுக்கைகள் குழந்தைகளுக்கு என சிறப்பு வசதிகள் நோய் தடுப்பு உக்திகள் மேற்கொள்ளபட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசு தொற்று தடுப்பு தொடர்பாக அளிக்கப்பட்டு வரும் அனைத்து வழிகாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரையில் முடிந்தவரை தொற்று பாதித்த நபர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றி தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார். மக்கள் மிகவும் கனவமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 

click me!