பாஜக தலைவர் அண்ணாமலையின் மனிதாபிமானம்... நெகிழ்ந்துபோன கடைநிலை தொண்டர்..!

Published : Jul 31, 2021, 12:22 PM ISTUpdated : Jul 31, 2021, 01:32 PM IST
பாஜக தலைவர் அண்ணாமலையின் மனிதாபிமானம்... நெகிழ்ந்துபோன கடைநிலை தொண்டர்..!

சுருக்கம்

லட்சுமணன் குணமானதும், அவரை வீட்டில் கொண்டு போய் விட்ட கட்சி நிர்வாகிகள், அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். 

சாதாரண தொண்டரை ராஜ மரியாதையோட கவனிக்க உத்தரவிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சமீபத்தில் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். 

சமீபத்தில் திருச்சி மாநருக்கு சென்ற அவருக்கு கட்சி தொண்டர்கள் தடபுடலாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது ஒரு போட்டோகிராபர் விழுந்து விட்டார்.  அவர் விழுந்தந்தில் லட்சுமணன் என்கிற தொண்டரின் கால் முறிந்து விட்டது. இதைக் கவனித்த அண்ணாமலை, உடனே லட்சுமணனை மருத்துவமனையில்  சேர்க்கும்படி கட்சியின் மருத்துவர் அணிக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். அவர்களும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்து ஆப்பரேஷன் செய்து இருக்கிறார்கள். 

இதற்கான செலவுகளை மருத்துவர் அணி மாநில தலைவர் டாக்டர் விஜயபாண்டியன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். லட்சுமணன் குணமானதும், அவரை வீட்டில் கொண்டு போய் விட்ட கட்சி நிர்வாகிகள், அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இதனால், நெகிழ்ந்து போன லட்சுமணன், அண்ணாமலைக்கு மனம் உருக நன்றி சொல்லி இருக்கிறார். அண்ணாமலையின் இந்த செயலை அனைவரும் மெச்சி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு
ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!