அப்படிபோடு.. கொரோனோவை வெல்லும் தமிழ்நாடு.. அடித்து தூள் கிளப்பும் முதலமைச்சர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2021, 11:34 AM IST
Highlights

அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கொரோனோ பேட்ஜை முதல்வருக்கு  அமைச்சர் மா. சுப்பிரமணியன் அணிவித்தார்.  அதனை தொடர்ந்து,  கொரோனோவை வெல்லும் தமிழ்நாடு என்ற பெயரில் சுகாதார துறையினர் சார்பில் நடைபெறும் உறுதிமொழி ஏற்றார்.  

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனோ பெருந்தொற்றை தவிர்க்கும் வண்ணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று முதல் ஒரு வார காலம் நடைபெற இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கொரொனா 3 ஆம் அலை குறித்த விழிப்புணர்வு பிரச்சார விழவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். 

கொரோனோ இரண்டாவது அலையை குறைந்த காலத்தில் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கொரோனோ பரவலை கட்டுபடுத்திட முக கவசம் அணிதல் , தனிமனித இடைவெளி , தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மக்கள் நல்வாழ்வு துறையால் தயார் செய்யபட்ட விழிப்புணர்வு பதாகைகளை பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கொரோனோ பேட்ஜை முதல்வருக்கு  அமைச்சர் மா. சுப்பிரமணியன் அணிவித்தார். அதனை தொடர்ந்து,  கொரோனோவை வெல்லும் தமிழ்நாடு என்ற பெயரில் சுகாதார துறையினர் சார்பில் நடைபெறும் உறுதிமொழி ஏற்றார். 

அதன் தொடர்ச்சியாக கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளி மையத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக தயார் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்டு பார்வையிட்டார். மேலும், இந்த விழா அரங்கில் அமைக்கப்பட்ட சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் அடங்கிய பிரச்சார கண்காட்சியில் MASK UP TN என்ற பெயரில் வைக்கப்பட்ட செல்பி மையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டார். இறுதியாக, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஒன்றை துவக்குவதுடன் எல்இடி பொருந்திய பிரச்சார வாகனத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்து தமிழகம் முழுவதும் வாகன பிரச்சாரம் பயனத்தை துவக்கி வைத்தார். இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

click me!