கொரோனா 3வது அலை.. தயார் நிலையில் ஆக்சிஜன் கொண்ட 10,000 படுக்கைகள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

By vinoth kumarFirst Published Jul 18, 2021, 12:20 PM IST
Highlights

தடுப்பூசி திட்டத்தின் மூலம் நியூமோகோகல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதிமுக அதை நடைமுறைப்படுத்தவில்லை. மூளைக் காய்ச்சல், நிமோனியா வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கிய தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்த ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை சின்னமலையில் தேவாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்;- கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்கும் என்பது யூகம்தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை குறைக்கவில்லை. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார். 

மேலும், தடுப்பூசி திட்டத்தின் மூலம் நியூமோகோகல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதிமுக அதை நடைமுறைப்படுத்தவில்லை. மூளைக் காய்ச்சல், நிமோனியா வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் 21 மாநிலங்களில் நிமோனியா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 21 மாநிலங்களில் தொடங்கிய பிறகும் 2 ஆண்டுகளாக நியூமோகோகல் தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை. தடுப்பூசி பற்றி வெள்ளை அறிக்கை கேட்டுகும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குழந்தைகளுக்கான திட்டம் தொடங்கவில்லை. 

மூளைக் காய்ச்சல், நிமோனியாவை தடுக்கும் நியூமோகோகல் தடுப்பூசி வெளிச்சந்தையில் ரூ.4,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு ஒன்றரை மாதத்தில் ஒரு ஊசி, மூன்றரை மாதத்தில் அடுத்த ஊசி, 9வது மாதம் கடைசி ஊசி போடவேண்டும். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி திட்டப்படி இலவசமாக நியூமோகோகல் ஊசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் போடுவதாக இருந்தால் ஒரு குழந்தை 12,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிமோனியா, மூளைக் காய்ச்சலால் 12 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

click me!