தனியார் பள்ளியில் மதமாற்றம்.? ஏன் நடவடிக்கை எடுக்கல.? தலைமைச் செயலாளரை ரவுண்டு கட்டும் தேகுஉபா ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2022, 2:22 PM IST
Highlights

பள்ளியில் மதமாற்றம் நடப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியில் மதமாற்றம் நடப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவினர் எழுப்பி வருகின்றனர். இதை மையமாக வைத்து, சமீபத்தில் தஞ்சையில் பள்ளி மாணவி  தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற முயற்சியே காரணமென பாஜகவினர் போராட்டம் நடத்தினர், பின்னர் விசாரணையில் அது போன்று எதுவும் நடக்கவில்லை என தெரியவந்தது. இந்நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மதமாற்றம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து உரிய புகார் கொடுத்தும் தலைமைச்செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- சென்னை ராயப்பேட்டையில்  சிஎஸ்ஐ மோனஹன்  என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது,  இதில் மாணவிகள் விடுதியும் செயல்பட்டு வருகிறது,  அந்த விடுதியில் மதமாற்றம் நடைபெறுவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதையும் படியுங்கள்: " தமிழகம் வளர்கிறது" .. ஸ்டாலினின் காலை சிற்றுண்டி திட்டத்தை மனமார பாராட்டிய ஜி.கே வாசன்..

அதன் அடிப்படையில் தலைமைச் செயலாளருக்கும், தமிழக காவல்துறை டிஜிபிக்கும் ஆணையம் கடிதம் எழுதியது, அக்கடிதத்தில் சிஎஸ்ஐ மோனஹன் பள்ளியில் கடந்த 6 ஆம் தேதி சிறப்பு குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது, அதில் ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதாக விடுதிக்கு அழைத்து வந்து அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாக தெரிந்தது, 

எனவே விடுதியில்  உள்ள மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தது.  மேலும் ஹாஸ்டல் வார்டனால் மாணவிகள்குகு தொல்லை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  அந்த விடுதியில் தங்கி உள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் ஆணையத்தின் புகாரில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் பதில் மனுவில், சம்பந்தப்பட்ட சிஎஸ்ஐ மோனஹன் பள்ளியில் மதமாற்ற முயற்சிகள் ஏதும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருந்தது.

இதையும் படியுங்கள்: கிரிவலப் பாதையில் உள்ள கோயில் நுழைவு வாயிலில் அமர்ந்து மது அருந்திய சாமியார்.. அதிர்ச்சியில் பக்தர்கள்.!

இந்நிலையில்  தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர், தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத விடுதிகள் சம்பந்தமாக 85 பக்கம் கொண்ட அறிக்கையை நேரில் வழங்கினார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் மாநில அரசினுடைய கருத்துக்கு எதிராக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேரடியாக ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே நேரத்தில் தனியார் பள்ளி மீது புகார் கொடுத்தும் இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே 20ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!