BREAKING வாய் கொழுப்பால் சிக்கலில் சிக்கிய உதயநிதி.. சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி.. சைலண்ட்மோடில் திமுக...!

By vinoth kumarFirst Published Jan 12, 2021, 5:47 PM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதை அடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதை அடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக பல்வேறு இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று கல்லக்குடியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு டிடிவி.தினகரன், குஷ்பு  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும்,  சசிகலா குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திவாகரன் மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இது தொடர்பாகவும் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்டிருந்தார். 

இந்நிலையில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,  சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அநாகரிகமான முறையில் பேசி இருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சியையும் ராஜலட்சுமி அளித்திருந்தார்.இதை ஆய்வு செய்த பிறகு, ஆபாசமாக பேசுதல், தொழில்நுட்ப தகவல் சட்டம், பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

click me!