அடாவடியில் பாஜகவும்- ட்ரம்பும் ஒன்றே... மம்தா பானர்ஜி சீற்றம்..!

Published : Jan 12, 2021, 04:35 PM IST
அடாவடியில் பாஜகவும்- ட்ரம்பும் ஒன்றே... மம்தா பானர்ஜி சீற்றம்..!

சுருக்கம்

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது

தோல்வியை ஒப்புக்கொள்ளாத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பனர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில், நடியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மம்தா பேசுகையில், ’மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு தனி விமானத்தில் பறந்து வரும் பா.ஜ.க.,வினர், விவசாயிகள் வீடுகளில் சாப்பிடுவதாக நாடகம் நடத்தி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிட்டு செல்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், பா.ஜ.க,வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தேர்தலில் தோற்ற பின்னரும் வெற்றி பெற்றுவிட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். அதுபோல் பா.ஜ.க.,வும் தனது தோல்வியை ஒப்புக்கொள்வது இல்லை. டிரம்பும், பா.ஜ.க.,வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது’’ என அவர் குற்றம்சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!