டேமேஜ் ஆன இமேஜ்... என் அப்பா, தாத்தா அப்படி ஒன்னும் என்னை வளர்க்கவில்லை... கதறும் உதயநிதி..!

Published : Jan 11, 2021, 11:43 AM ISTUpdated : Jan 12, 2021, 05:42 PM IST
டேமேஜ் ஆன இமேஜ்... என் அப்பா, தாத்தா அப்படி ஒன்னும் என்னை வளர்க்கவில்லை... கதறும் உதயநிதி..!

சுருக்கம்

சசிகலா குறித்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சசிகலா குறித்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத் துறை சார்பில் மாநாடு மற்றும் சட்டக் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைத்தார். அப்போது, பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் நான் பல்வேறு பொய்யான அவதூறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன்.

சட்டதுறை என்னை காப்பாற்றும் என நம்பி தான் நான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன். பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். 

கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை. கருணாநிதியின் இறுதி ஆசையான அவரது நினைவு மண்டபம் அண்ணா நினைவு மண்டபம் அருகே அமைய வேண்டும் என்பது அதை பெற்று தந்தவர்கள் வழக்கறிஞர் அணி. எனவே சட்டத்துறை அணிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!