கோவை அருகே பிடிபட்ட கண்ட்டெய்னர்…. திறக்கச் சொல்லை போராடிய பொது மக்கள் மீது போலீஸ் தடியடி !! லாரிக்குள் என்ன இருந்தது ?

Published : Apr 09, 2019, 08:07 AM IST
கோவை அருகே பிடிபட்ட கண்ட்டெய்னர்…. திறக்கச் சொல்லை போராடிய பொது மக்கள் மீது போலீஸ் தடியடி !! லாரிக்குள் என்ன இருந்தது ?

சுருக்கம்

கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதால் சந்தேகமடைந்த பொது மக்கள் லாரியை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் உடனடியாக லாரியை திறக்கச் சொல்லி பொது மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்லின்போது கோவை அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது ஆவணங்கள் ஏதுமின்றி இரண்டு லாரிகளிலும் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கான ரூபாய் சிக்கியது. 

ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அந்த லாரிகள், அதில் இருந்த பணம் மற்றும் அது யாருடையது என்பது மறந்து குறித்தெல்லாம்  மக்கள் மறந்து விட்டனர்.


இந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென தாறுமாறாக சென்றது. கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருக்கலாம் என அப்பகுதிவாசிகளிடையே வதந்தி பரவியது.
 
தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா என சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டது. உடன் லாரியை சுற்றி வளைத்து சிறைபிடித்து கண்டெய்னார் லாரியின் பூட்டை உடைத்து திறக்க பொதுமக்கள் முற்பட்டனர். 

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் லாரிக்குள் டீத்தூள் பாக்கெட்டுகள் இருப்பதாக கூறினார். தொடர்ந்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்தால் சட்டபிரச்னை ஏற்படும் என்பதால்  , லாரியை கலெக்டர் அலுவலகம் கொண்டு சென்று அங்கு வைத்து திறக்க ஏற்பாடு செய்யலாம் என கூறினர்.

எனினும் பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்து தகாரறு செய்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர்.பின்னர் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர் பூட்டை உடைத்து திறந்ததில் பணம் இல்லை எனவும், டீத்தூள் பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்தது.  

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!