காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி.. இது எங்களது உரிமை.. டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்..!

By vinoth kumarFirst Published May 31, 2023, 10:12 AM IST
Highlights

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் காவிரியின் குறுக்கே மேகதாது கட்டுவதில் உறுதியாக இருந்து வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் காவிரியின் குறுக்கே மேகதாது கட்டுவதில் உறுதியாக இருந்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- மல்யுத்த வீராங்கனைகள் போராட்ட விவகாரம்… குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாதது ஏன்? மம்தா கேள்வி!!

இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார், நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது அணை மற்றும் மகதாயி நதி நீர் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார். 

 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் டி.கே.சிவக்குமார்;- காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். கர்நாடக மாநிலத்தின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த தான் விரைவில் டெல்லி சென்று உரிய மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

இதையும் படிங்க;-  பதக்கங்களை கங்கையில் வீசி எறிவோம்: டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள் வெளியிட்ட உருக்கமான கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமார்மேகதாது கட்டுவது உறுதி என கூறியுள்ளது தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி டி.கே. சிவக்குமார் யாத்திரை நடத்தியதியது குறிப்பிடத்தக்கது. 

click me!