அடுத்து டெங்கு கொசுவை தேடிகிட்டு வருவாங்க பாருங்களேன்...! மத்திய பாஜகவை விளாசும் கராத்தே...! 

Asianet News Tamil  
Published : Jan 13, 2018, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
அடுத்து டெங்கு கொசுவை தேடிகிட்டு வருவாங்க பாருங்களேன்...! மத்திய பாஜகவை விளாசும் கராத்தே...! 

சுருக்கம்

Congressman Karate Thiagarajan said that the municipal authorities are looking for the dengue mosquito.

ப. சிதம்பரம் வீட்டிற்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு போவதை அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வருவதாகவும் அடுத்து டெங்கு கொசு இருக்குன்னு தேடிட்டு வருவாங்க மாநகராட்சி அதிகாரிகள் எனவும் காங்கிரஸின் காரத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் வீட்டில் தான் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியிலிருந்து ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த சோதனை குறித்து கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குநரின் உத்தரவின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

அமலாக்கத்துறை சோதனையின்போது எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றார். காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சும்மாவே அமர்ந்திருந்ததாகவும், யாரிடமும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் அருண் நடராஜன் கூறினார்.

இந்நிலையில் இந்த ரெய்டுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சிம்ம சொப்பனமாக இருப்பதால் இதுபோன்ற ரெய்டு நடத்தி அச்சுறுத்துவதாகவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு போவதை போல சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார். 

கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்தார் என்றும் ரெய்டு நடத்துவார்கள் என்றும் கராத்தே தியாகராஜன் கிண்டலடித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!