காங்கிரஸ் வெற்றியே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. ப.சிதம்பரம் விமர்சனத்திற்கு சுட சுட பதிலடி கொடுத்த பாஜக..!

By vinoth kumarFirst Published Nov 5, 2021, 1:55 PM IST
Highlights

சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதி, 3 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை  தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றியால் புதிய அலை வீசுவதாகவும் உள்ளன. அது வலிமையையும், வேகத்தையும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் பயம் காரணமாகவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வை அடுத்து பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கிடுகிடுவென உயர்த்தி வந்தனர். இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடு முழுவதும் கடந்தது, டீசலும் லிட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகினர். இதனால், எதிர்கட்சியினர் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். 

இதையும் படிங்க;- ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. அண்ணன் கள்ள உறவால் தம்பி ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது இது தீபாவளிநாளான நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பயங்கரமான அடி கிடைத்து 14 தொகுதிகளில் தோற்றது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்கப்பட்டது தொடர்பாக ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- தூத்துக்குடியில் அரசு மருத்துவரின் அட்டூழியம்.. அரசு மருத்துவமனையில் ஊழியருடன் உல்லாசம்..!

இது தொடர்பாக முன்னாள் நிதிஅமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதி, 3 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை  தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றியால் புதிய அலை வீசுவதாகவும் உள்ளன. அது வலிமையையும், வேகத்தையும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க;- போலீஸ் மரணத்துக்கு இழப்பீடு கொடுத்தீங்களே.. அரசு அலட்சியத்தால் இறந்த இளைஞருக்கு? பாயிண்டை பிடித்த பாஜக..!

குறிப்பாக, அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்ற எங்கள் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் மத்திய அரசின் பேராசையால்தான் எரிபொருள் மீது அதிகாமன வரி விதிக்கப்படுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த குற்றச்சாட்டிற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்

இதுதொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பதிவில்;- மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களின் துயரத்தை போக்குவதற்காக பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியதை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதனை நாங்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம் என பதிலளித்துள்ளார்.

 

click me!