கேட்ட பணம் கிடைத்த பிறகும் நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்.. உண்மையை போட்டு உடைத்த எல்.முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2021, 1:16 PM IST
Highlights

மொத்தத்தில் தமிழக அரசு 1178 கோடி ரூபாய் கேட்டு வந்தது, ஆனால் மத்திய அரசு நவம்பர் 2ஆம் தேதி அன்று அதற்கான தொகையை காட்டிலும் அதிகமான தொகையை, அதாவது 1361 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு உரிய நேரத்தில் நிதி  வழங்கிய பிறகும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை எனக்கூறி தமிழக மக்களை குழப்ப நாடகம் நடத்துகிறார் என மத்திய இணை அமைச்சர் முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு கேட்ட தொகையை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்ட பின்னரும் ஏன் ஸ்டாலின் இப்படி ஒரு நாடகத்தை பொதுமக்கள் மத்தியில் நடத்துகிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் நடத்தும் நாடகம் மிகவும் கேலிக்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள்  100 நாள் வேலை திட்டம் என்ற திட்டத்தின் கீழி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீர்நிலைகளை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வருமானத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கில் பணம் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த பணியில் ஈடுபடுவார்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும், அந்தந்த ஊராட்சியில் அவர்கள் குடியிருக்க வேண்டும், ஆண்,பெண் இருபாலருக்கும் இதில் வேலை செய்யலாம், பணியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் ஆதார் மற்றும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. 

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது,  மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உடனுக்குடன் மத்திய அரசுக்கு தெரிவித்து அதற்கான நிவாரணத்தை பெறுவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி நிதி, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு போன்றவற்றைக் குறித்து தமிழக அமைச்சர்கள் அதிகாரிகள் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்த வரிசையில தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழி பணியாற்றியவர்களுக்கு கொடுக்க ஊதியம் இல்லை என்றும், மத்திய அரசி கொடுத்த  நிதி தீர்ந்துவிட்டது என்றும், உடனே மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக 100 நாள் வேலை திட்டம் உள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கிய 3524. 69 கோடியில் மொத்தத் தொகையும் 15-9- 2011 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதன்பிறகு இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால் 1-11-2021 அன்று உள்ளவரை 1178.12 கோடி  ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டினார். எனவே ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனே மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் இது குறித்து  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அரசு வலியுறுத்தி இருந்த அந்த நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளார். மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி அனைத்து மாநிலங்களுக்கும் உரிய காலகட்டத்தில் உரிய முறையில் வழங்கப்பட்டு விட்டது,  இந்த திட்டத்தில் தமிழகத்திற்கு 2500 லட்சம் மனித நாட்கள் மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் 2190 லட்சம் மனித நாட்கள் மட்டுமே தமிழக அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அதிகமான நாட்கள் ஒடுக்கப்பட்டும் குறைவான நாட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிதியாண்டில் மட்டும் தமிழக அரசுக்கு 6255 கோடி ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இரண்டு தவணைகளாக ஒதுக்கப்படுவது வழக்கம், ஏப்ரலில் நிதி வழங்கப்பட்டு விடும், இரண்டாவது தொகை அக்டோபரில் வாங்கப்படும், ஆனால் அக்டோபருக்கான  நிதி  கேட்பு கடிதம் தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு தாமதமாகவே வந்துள்ளது, ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த அதற்கான துறை அதிகாரிகள் தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். மொத்தத்தில் தமிழக அரசு 1178 கோடி ரூபாய் கேட்டு வந்தது, ஆனால் மத்திய அரசு நவம்பர் 2ஆம் தேதி அன்று அதற்கான தொகையை காட்டிலும் அதிகமான தொகையை, அதாவது 1361 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகம் கேட்டதை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் கூட மத்திய அரசு நிதி விடுவிக்கவில்லை என பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார். அதாவது தேவையில்லாத ஒரு குழப்பத்தை  மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இப்படி ஒரு நாடகம் நடத்துகிறார். அவர் செய்யும் இந்த நாடகம் கேலிக்கூத்தாக உள்ளது, எதனால் இப்படி ஒரு நாடகத்தை அவர் நடத்துகிறார் என்று தெரியவில்லை என எல்.முருகன் வேதனை தெரிவித்தார்.
 

click me!