தலைகீழாக மாறிய தமிழக காங்கிரஸ் நிலை... கன்னியாகுமரியால் இழுபறி..!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2019, 5:10 PM IST
Highlights

மக்களவை தேர்தலுக்காக தமிழக கட்சிகள் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனையும் தாண்டி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறனர். 
 

மக்களவை தேர்தலுக்காக தமிழக கட்சிகள் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனையும் தாண்டி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறனர்.

 

மக்களவை தேர்தலில் அனைத்து கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். பாஜக- காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை அளிக்கவில்லை. பாஜக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் நிர்வாகிகள் அறித்த போதும் கூட காங்கிரஸ் சத்தமில்லாமல் இருந்து வருகிறது.

 


தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக நிர்வாகிகள் பாதிப்பேர் சீட்டு கேட்டு டெல்லிக்கு படையெடுத்து உள்ளனர். வேட்பாளர்களை தேர்வு செய்த பிறகே தொகுதிகளை காங்கிரஸ் தலைமை கேட்டது. ஆனால், இப்போது நிலை அப்படியே தலைகீழ் ஆகி விட்டது. ஏற்கனவே தேர்வு செய்த பட்டியலை மேலிடம் அப்படியே மாற்ற முடிவு செய்தது தான் அதற்கு காரணம் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என உறுதியாகக் கூறக்கூடிய கன்னியாகுமரின் தொகுதிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சீட் கேட்டு கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கடுமையாக முட்டி மோதி வருகின்றனர். இதனால், அங்கு யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கட்சி தலைமை திணறி வருகிறது. அதேபோல் திருவள்ளூர் தனித் தொகுதிக்கும் இதே நிலை உருவாகி இருக்கிறது. நாளுக்கு நாள் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருவதால் வேட்பாளர் தேர்வை உடனே முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் ராகுல் காந்தியிடம் அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறார்கள். 

click me!