அடேங்கப்பா... உதயநிதி விஷயத்தில் திமுகவையே மிஞ்சிய காங்கிரஸ்... துணை முதலமைச்சராக்கியே தீரணுமாம்..!

Published : Dec 13, 2021, 04:22 PM IST
அடேங்கப்பா... உதயநிதி விஷயத்தில் திமுகவையே மிஞ்சிய காங்கிரஸ்... துணை முதலமைச்சராக்கியே தீரணுமாம்..!

சுருக்கம்

உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும்

உதயநிதியை துணை முதலமைச்சராக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்ஹ ஆர்.எஸ்.ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உதயநிதிக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மட்டுமின்றி, திமுக வட்டாரங்களிலும் எழுந்தது. திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்றபின் அவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற முழக்கம் திமுக வட்டாரங்களில் தொடங்கி இருக்கிறது. உதயநிதியின் பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் உயிர் நண்பருமான அன்பில் மகேஷ் “உதயநிதி , சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டும் சொந்தம் கொண்டாடாமல் 234 தொகுதியிலும் சொந்தம் கொண்டாட வேண்டும். அவர் அமைச்சராக பொறுப்புக்கு வரவேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்களின் விருப்பம். அவரின் சேவை ஒரு தொகுதியோடு சுருங்கி விடக் கூடாது” என்று கூறினார்.


இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஆகையால் அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.ராஜன். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தடாலடிக்குச் சொந்தக்காரர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ரஜினியோடு பயணித்தார். 

ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்ததோடு, ரஜினியால் தான் வாழ்க்கையே போனது எனவும் சீறினார். மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தவருக்கு, விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இவர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு படிநிலைகளை கடந்து இந்த பொறுப்புக்கு வந்திருந்திருக்கிறார். தன் இல்லத்திலேயே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என இருவரையும் பார்த்தே வளர்ந்ததால், இருவரது ஆற்றலையும் இந்த இளம் வயதிலேயே ஆழமாக உள்வாங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும். இளம்தலைமுறையினர் மத்தியில் மதவாத சிந்தனைகளை வெறுத்து, சமத்துவ சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கு எல்லா மக்களும் விரும்பும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவிகொடுப்பதே பொருத்தமானதாக இருக்கும்''
எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!