காந்தி குடும்பத்தின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர் தான் நாராயணசாமி.. புதுச்சேரியை அமர்களப்படுத்தி அமித்ஷா.!

Published : Feb 28, 2021, 01:44 PM IST
காந்தி குடும்பத்தின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர் தான் நாராயணசாமி.. புதுச்சேரியை அமர்களப்படுத்தி அமித்ஷா.!

சுருக்கம்

நல்ல பொய் சொல்பவர் விருது கொடுக்க வேண்டுமானால் அது நாராயணசாமிக்குத்தான் தர வேண்டும். புதுச்சேரி மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிக விரைவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். 

சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 

காரைக்காலுக்கு இன்று காலை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகையில்;- புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல் இருந்ததற்கு நாராயணசாமி தான் காரணம். பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிட்டது. அக்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர். 

நல்ல பொய் சொல்பவர் விருது கொடுக்க வேண்டுமானால் அது நாராயணசாமிக்குத்தான் தர வேண்டும். புதுச்சேரி மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிக விரைவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமைக்கிறோம் என்று கூறி அவர் ஆட்சியை பிடித்தார். ஆனால், மேலிடத்திற்கு சென்று காந்தி குடும்பத்தின் காலை பிடித்து ஆட்சியை வாங்கியவர் தான் நாராயணசாமி. தகுதிக்கும், திறமைக்கும் என்றுமே நாராயணசாமி வாய்ப்பு கொடுத்ததில்லை. 

மேலும், பேசிய அவர் நாராயணசாமிக்கு மக்கள் குறித்து அக்கறை இல்லை, காங்கிரஸை வளர்ப்பதிலேயே அக்கறை. ஊழலை மட்டுமே வளர்த்தது நாராயணசாமி தலைமையிலான அரசு. புதுச்சேரியில் 75 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், 40 சதவீதமாக குறைப்போம். புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு திட்டங்களை கொடுத்தது. ஆனால், இந்த திட்டங்கள் மக்களுக்கு முறையாக பயன்படுத்தவில்லை. இதற்கு நாராயணசாமி தான் காரணம்.

பாஜக வெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் புதுச்சேரியில் நடத்தவில்லை. நாராயணசாமி, அவரின் தலைவரிடமே பொய் கூறியவர். மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அமித்ஷா குற்றம்சாட்டினார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!