#BREAKING ராகுல்காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கும் முடக்கம்..!

By vinoth kumarFirst Published Aug 12, 2021, 11:15 AM IST
Highlights

ராகுல்காந்தி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில்  தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கும் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல்காந்தி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில்  தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கும் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டார். போக்சோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும்.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், டுவிட்டர் நிறுவனத்துக்கு புகார் அளித்திருந்தது. பின்னர், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தையும் நீக்கினார். இதனையடுத்து, ராகுல் காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 5 பேரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இது மத்திய அரசின் தலையீட்டால்தான் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். 

இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தெரிகிறது. 

click me!