அதானிக்கு தாரை வார்க்க தான் பிரதமர் மோடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்கிறார் - ஜோதிமணி விமர்சனம்

Published : Jan 04, 2024, 11:17 AM IST
அதானிக்கு தாரை வார்க்க தான் பிரதமர் மோடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்கிறார் - ஜோதிமணி விமர்சனம்

சுருக்கம்

அதானிக்கு தாரை வார்த்து கொடுக்கத்தான் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதாக கரூரில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி மேம்பாடு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையம் அதானிக்கு தாரை வார்த்து கொடுக்கத்தான் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு எவ்வித நிதி உதவியும் அளிக்கவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார். 

Murasoli : கேட்ட தொகையும் கொடுக்கல.. வெறும் கையால் முழம் போட்டு, வார்த்தைகளால் வடை சுட்ட மோடி- விளாசிய முரசொலி

அதே போன்று மத்திய அரசு வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதிகளை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. தமிழகத்தில் கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருக்கிறது என்றார்.

Pongal Gift : பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, வெல்லத்திற்கு பதிலாக ரூ.500.. வங்கி கணக்கில் செலுத்த முடிவு
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!