கொரோனா போரில் இந்தியா இல்லை ..!! அனைவரையும் யோசிக்க வைத்த ராகுல் காந்தி..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 14, 2020, 6:54 PM IST
Highlights

இந்தியாவை  காட்டிலும்  வறுமையில் உள்ள  ஆப்பிரிக்க நாடுகளான  லாவோஸ் 10 லட்சம் பேருக்கு 157 பேர் என்ற விகித த்திலும்,  மிகவும் ஏழை நாடான மற்றொரு ஆப்ரிக்க நாடான நைஜர் 10 லட்சம் பேருக்கு 182 பேர் என்ற அடிப்படையிலும்  சோதிக்கிறது ,

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதில் மிகவும் ஏழை நாடுகளாக கருதப்படும் ஆப்பிரிக்க நாடுகளான லாவோஸ் , நைஜர் போன்ற நாடுகளைவிட இந்தியா  பின்தங்கியுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது உலக அளவில்  19 லட்சத்து 39 ஆயிரத்து 463 பேருக்கு  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  உலகளவில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து  879  பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் 10 ஆயிரத்து 541  பேருக்கு இந்தியாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . சுமார் 358 பேர் இந்த வைரசுக்கு இங்கு உயிரிழந்துள்ளனர் .  மகாராஷ்டிரா, டெல்லி ,  தமிழ்நாடு ,  உள்ளிட்ட மாநிலங்களில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

இந்நிலையில்  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .  இதனால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் ,  வேலைக்கு சென்றால் தான் பிழைப்பு என வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், ஊரடங்கால் மூன்று வேலை உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் .  இந்த ஊரடங்கு காலத்திற்குள் நாடு முழுவதும் வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும் என இந்திய அரசு திட்டமிட்டுள்ளது .  ஆனால் இதற்காக சீனாவிடம் ஆர்டர் செய்யப்பட்ட ராபிட் கிட்டுகள் அதாவது அதிவிரைவு பரிசோதனை கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை இதனால் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும்  இன்னும் பலருக்கு இந்த நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

 

இந்தியாவின் இந்நிலையை  சுட்டிக்காட்டியுள்ள ராகுல்காந்தி உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் எல்லாம் அதிக அளவில் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் இன்னும் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளது அதற்காக  சீனாவிடமிருந்து வாங்க திட்டமிடப்பட்ட கிட்டுகள்  இன்னும்  இந்தியாவுக்கு வந்து சேரவில்லை ,  இதனால் ஊரடங்கின் முழு பலனை இந்தியா அனுபவிக்க முடியாமல் போகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் ,  ஒருவனோ டெஸ்ட் வீடுகளை வாங்குவதில் இந்தியா பின்தங்கியுள்ளது , வேகம் காட்ட வேண்டும்,  அதுமட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்தியா நாளொன்றுக்கு குறைந்த அளவிலேயே மக்கள் மத்தியில்  பரிசோதனை செய்கிறது .

அதாவது 10 லட்சம் பேருக்கு 149 பேர் என்ற  அடிப்படையில்  இந்தியா பரிசோதனை செய்கிறது , ஆனால் இந்தியாவை  காட்டிலும்  வறுமையில் உள்ள  ஆப்பிரிக்க நாடுகளான  லாவோஸ் 10 லட்சம் பேருக்கு 157 பேர் என்ற விகித த்திலும்,  மிகவும் ஏழை நாடான மற்றொரு ஆப்ரிக்க நாடான நைஜர் 10 லட்சம் பேருக்கு 182 பேர் என்ற அடிப்படையிலும்  சோதிக்கிறது ,  ஹோண்ட்ராஸ் 10 லட்சம் பேருக்கு 162 பேர் என்ற விகிதத்தில்  சோதனை செய்கிறது ,  ஆனால் இந்த நாடுகளுக்கெல்லாம் அடுத்த நிலையில்தான் இந்தியா உள்ளது  என்பது வேதனையளிக்கிறது,  உலக நாடுகள் எல்லாம் கொரோனாவை  எதிர்த்து போரிட்டு வரும் நிலையில்  அந்தப் போரில் இந்தியா இல்லைவே இல்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார் .
 

click me!