மாமா... மாமானு உருகியும் ஆப்பு வைத்த ஆடியோ... கே.கே.எஸ்.எஸ்.ஆரை வசமாக சிக்கவைக்க அதிமுக அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 6:40 PM IST
Highlights
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் தடம்பதித்து, திமுக ஆட்சியிலும் இடம்பிடித்த பழம்பெரும் அரசியல்வாதியான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் ஆடியோவை அவர் நம்பி பேசிய நபரே வெளியிட்டு சிக்கலில் மாட்டிவிட்டது தான் அந்தோபரிதாபம்..! 
அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாக ஒரு அலைபேசி உரையாடல் வெளியானது. அந்த ஆடியோவை விவகாரமாக்க அதிமுக களத்தில் குதித்துள்ளது. 

எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட போது ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். பின்னர் ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டு திமுகவில் ஐக்கியமானார். திமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். பழம்பெரும் அரசியல்வாதியான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரார் இப்போது மொபைலில் உருகி, மாமா... மாமாவென மருகி சிக்கலில் மாட்டியுள்ளார். மாமா மாமா என ஆரம்பிக்கும் அந்த ஆடியோ பதிவில்,’அனைத்து ஊர்களிலும், எல்லா ஜமாத்களிலும் சோதனை செய்தார்கள். ஆனால், நம்மூர் ஜமாத்திற்கு செல்லவில்லை. அதிகாரிகளை சத்தம் போட்டேன். எந்த தொந்தரவும் நம் மக்களுக்கு இல்லாதபடி வைத்திருக்கிறேன் என்றால் அனைத்தும் என் ஓட்டு என்று உங்களுக்கு தெரியும்.

கொரோனா வந்தால் அசிங்கம் இல்லையா? பக்கத்து வீட்டுக்காரர் கூட பேச மாட்டார். அருப்புக்கோட்டை சட்டமன்றத்தில் போலீஸ் தொந்தரவு, தாசில்தார் தொந்தரவு, கலெக்டர் உத்தரவு இல்லாமல் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். இல்லையென்றால் உங்களை கிறுக்கு ஆக்கி இருப்பர்கள் என்று பேசி இருந்தார். சி.என்.ஏ போராட்டத்திற்கு முழுமையாக திமுக ஆதரவு கொடுத்தது.  திமுகவுக்கு தான் உங்கள் ஓட்டு என்ற நிலை தமிழ்நாட்டில் வந்து விட்டது என்றும் பேசி இருந்தார்.

இந்த ஆடியோ அடிப்படையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே... உங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், சட்டமன்ற  உறுப்பினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சென்ற அரசு அதிகாரிகளை மிரட்டி உள்ளார். நாடு முழுவதும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தினர் மற்றும் வெளிநாட்டு மக்கள் இருக்கின்றனர் என்பதை சோதனையிட்டு வரும் நிலையில் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் நிர்வாகி மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, கிருமித்தொற்று உள்ள நபர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சியை தடுத்துள்ளார்.

அரசு அதிகாரிகளை அவதூறாக பேசியும், திமுக குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி விவகாரத்தில் திமுக, இஸ்லாமியர்களுக்கு  ஆதரவாக இருந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுகதான் இஸ்லாமியர்களை தூண்டிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஓட்டுக்காக தான் இஸ்லாமிய மக்கள் மீது உங்கள் கட்சி பாசமாக இருப்பது போன்ற நடிப்பை இந்த உரையாடல் உறுதிசெய்துள்ளது.

ஒருவேளை இந்த உரையாடல் போலி என்று சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களே சொன்னால் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் திமுக உள்ளது. ஒரு தொற்று பரவி நாசத்தை ஏற்படுத்துவதை விட உங்களுக்கு முஸ்லிம்களின் ஓட்டு தான் முக்கியம் என்ற அவரது நிலைப்பாடுதான் உங்கள் கட்சியின் நிலைப்பாடா? அப்படி என்றால் கட்சி நிலைக்கு எதிராக செயல்பட்டார் என்று உங்கள் கட்சி முன்னாள் அமைச்சர் கே.பி.இராமலிங்கம் மீது எடுத்த நடவடிக்கை போல சாத்தூர் ராமச்சந்திரன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன திமுகவுக்கு எதிரான கட்சிகள்.

இந்நிலையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது பிறரை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு குந்தகம் விளைப்பதாகக் கூறி அவர் மீது வழக்குத் தொடரலாமா? என அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் தடம்பதித்து, திமுக ஆட்சியிலும் இடம்பிடித்த பழம்பெரும் அரசியல்வாதியான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் ஆடியோவை அவர் நம்பி பேசிய நபரே வெளியிட்டு சிக்கலில் மாட்டிவிட்டது தான் அந்தோபரிதாபம்..! 
click me!