நம் ராணுவ வீரர்களை கொல்லும் அளவிற்கு சீனாவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது.?? ரத்தம் கொதிக்கும் ராகுல் காந்தி

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2020, 2:32 PM IST
Highlights

இந்திய எல்லையில் நுழைந்து நம் வீரர்களை கொல்லுமளவிற்கு சீனாவுக்கு  எங்கிருந்து தைரியம் வந்தது என ஆதங்கம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்வளவு நடந்தும் ஏன் பிரதமர் மோடி மௌனமாக இருக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்திய எல்லையில் நுழைந்து நம் வீரர்களை கொல்லுமளவிற்கு சீனாவுக்கு  எங்கிருந்து தைரியம் வந்தது என ஆதங்கம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்வளவு நடந்தும் ஏன் பிரதமர் மோடி மௌனமாக இருக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார். அடுக்கடுக்காக அவர் எழுப்பும் கேள்வி பாஜகவை திக்குமுக்காட வைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல் சீன தரப்பிலும் 35 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவ வீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான  எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார், பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்.? அவர் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்.? இனி போதும் போதும் நடந்தவைகள் அனைத்தும் போதும், எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்,  எல்லை தாண்டி நம் வீரர்களை கொள்ளுமளவிற்கு சீனாவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது.? அவர்கள் நம் நிலத்தை  ஆக்கிரமிக்க தைரியத்தை யார் கொடுத்தது.? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, பிரதமர் மோடி அவர்களே தயவுசெய்து வெளியில் வாருங்கள், என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லுங்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு 20 இந்திய வீரர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது, வீரர்களை இழந்து அவர்களது குடும்பமும் நாடும் வாடுகிறது,  சீனா இந்திய நிலத்தை அபகரித்து, நம் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளது, இவ்வளவு நடந்தும் நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்.?  மாண்புமிகு பிரதமர் அவர்களே நீங்கள் எங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள்.? நீங்கள் தயவுசெய்து வெளியில் வாருங்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம், எதற்கும் பயப்படாமல் வெளியே வந்து உண்மையைச் சொல்லுங்கள் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா செவ்வாய்க்கிழமை அன்று கேரளாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்திய சீன எல்லையில் ராணுவம் பொருத்தமான பதிலடியை கொடுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
 

click me!