"பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்..கொலைகாரனை பத்தி பேசுறீங்க.!" கடுப்பான அமெரிக்கை நாராயணன்

By Raghupati R  |  First Published May 21, 2022, 12:03 PM IST

A.G Perarivalan : திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தது. அதுமட்டுமின்றி போராட்டமும் தமிழகம் முழுவதும் நடத்தியது.


ராஜிவ் காந்தி மரணம் :

இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 31ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.  இவ்வழக்கை கடந்த செவ்வாய்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. 

பேரறிவாளன் விடுதலை :

உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தது. அதுமட்டுமின்றி போராட்டமும் தமிழகம் முழுவதும் நடத்தியது.

அமெரிக்கை நாராயணன் கண்டனம் :

இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அமெரிக்கை நாராயணன், 'குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தமிழர்கள் பெயர்கள் யாருக்கும் தெரியாது. பேரறிவாளனின் பெயர் தெரியும். வெட்கப்பட வேண்டும். இவர்களை பற்றி எத்தனை பேர் பேசியுள்ளீர்கள். உயிர்போன தமிழர்களை பற்றி பேசுங்கள். கொலைகாரனை பற்றி பேசுகிறீர்கள். சட்டம் தெரியாத கே.டி.தாமஸை போய் நீதிபதி என்று சொல்கிறீர்களே, பேரறிவாளன் தூக்கில்போட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

இதையும் படிங்க : #BREAKING : யமுனோத்ரி நெடுஞ்சாலையில் விபத்து.. 10,000 பேர் சிக்கி தவிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் !

click me!