காங் நாத்திக கட்சியோ, இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல... ஆளுநர் மீது மரியாதை உண்டு.. அடங்கி பேசிய அழகிரி.

Published : Jun 16, 2022, 03:37 PM IST
காங் நாத்திக கட்சியோ, இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல... ஆளுநர் மீது மரியாதை உண்டு.. அடங்கி பேசிய அழகிரி.

சுருக்கம்

காங்கிரஸ் என்பது நாத்திக கட்சியோ அல்லது இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல சாதி மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் என்பது நாத்திக கட்சியோ அல்லது இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல சாதி மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். 

நேஷனல்  ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காவல்துறையில் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். ப.சிதம்பரம் ,ஜோதிமணி போன்றோர் கடுமையாக நடத்தப்பட்டுள்ளனர், ப.சிதம்பரத்திற்கு கை முறிவு ஏற்பட்டிருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் இன்று சென்னை  சின்னமலையின் போராட்டம் நடைபெற்றது.

அதில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சென்னையில் மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத் தலைவர்களை கசக்கிப் பிழிந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. அடிக்கடி துரைமுருகனும் முதலமைச்சரும் ஆளுநர்  மாளிகைக்கு செல்கிறார்கள். நாங்கள் ஆளுநர் மாளிகை கேட்டு வரை செல்கிறோம், எனவே காவல்துறையினர் எங்களைத் தடுக்க வேண்டாம், ஆளுநர் பதவி மீது எங்களுக்கு மரியாதை உள்ளது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை  என்பது காங்கிரஸ் கட்சியின் சொத்து. அதை பாஜக ஆர்எஸ்எஸ் பெயரில் எழுதி கொடுக்க முடியாது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கட்சிப் பெயரில் இல்லாமல் கட்சியினர் பெயரில் வைத்துள்ளோம். காங்கிரஸ்  கட்சி நாத்திக கட்சியோ, இந்துமத எதிர்ப்பு கட்சியோ அல்ல அது சாதி மதத்திற்கு எதிரான கட்சி. இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர் என்றார் மகாத்மா காந்தி, வேறு மதம் குறித்த கருத்து சொல்லக்கூடாது. அவர்களுடன் சண்டை போடுவதும் தவறு, மேகதாது அணையால் காவிரி டெல்டா பாலைவனமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை வரைவு திட்டம்  அனுமதி கொடுத்ததே தவறு, காங்கிரஸின் கொள்கை வெல்லும், பாஜகவின் சந்தர்ப்பவாதம் விரைவில் வீழும். இவ்வாறு அவர் கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!