வேட்பாளர் மீது அதிருப்தி... தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்.. காங்கிரஸ் அலுவலகத்தில் பதற்றம்...!

By vinoth kumarFirst Published Mar 24, 2019, 4:23 PM IST
Highlights

திருவள்ளூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் களம் சூடுபிடித்து தலைவர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவள்ளூர் (தனி) மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஜெயக்குமாருக்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயக்குமார் நாமக்கல்லை சேர்ந்தவர் என்றும், செல்வப்பெருந்தகை என்பவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். 

இதனையடுத்து இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். இந்நேரத்தில் தொண்டர்கள் கட்சியின் தலைமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எதிர்பாராத விதமாக அழகிரி சென்ற காரை மறித்தனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி தொண்டர்கள் ராஜவேல், சீனு ஆகியோர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!