
காங்கிரஸ் எந்த காலத்திலும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என்றும், அமித்ஷா, மோடியைப் போல எல்லா இடத்திலும் இந்தி தான் இருக்க வேண்டும் என ஒருபோதும் ஜவஹர்லால் நேரு சொன்னது இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக இந்தி விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு இந்தியைத் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. தமிழகம். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..
இந்நிலையில் உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா சென்று திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை விமான நிலையத்தில், மத்திய அரசு இந்தி திணிப்பு செய்ய வில்லை, மத்திய அரசு இந்தித் திணிப்பு செய்தால் அதை தமிழக பாஜக எதிர்க்கும் எனக் கூறினார்.இந்நிலையில்தான் இந்தி திணிப்பு விவகாரத்தில் பாஜக முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Vande Bharat Express: ;சென்னையிலிருந்து 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்: எங்கு, எப்போது தொடக்கம்?
இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.எஸ் அழகிரி, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி சார்பாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
தனது உழைப்பால், திறமையால் இந்த இடத்திற்கு வந்தவர் ஸ்டாலின் என்றார். பாஜக தலைவர் அண்ணாமலை இந்தியை திமுக எதிர்ப்பது கர்நாடகம் என்றும் அப்படி இருக்க காங்கிரசுடன் திமுக எப்படி கூட்டணி வைக்கலாம் என்று கேட்கிறார், காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் இந்தி திணிப்பை ஆதரித்து கிடையாது, நேரு இந்தி பேச விரும்பாத மக்கள் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வைத்திக் கொள்ளலாம் என உத்தரவாதம் அளித்தார். எந்த காலத்திலும் அமித்ஷா மோடி போல எல்லா இடங்களிலும் இந்தி தான் இருக்க வேண்டும் என ஜவஹர்லால் நேரு சொல்லவில்லை.
அது காங்கிரஸில் கொள்கையும் அல்ல, ஐபிஎஸ் முடிக்கிற வரை தனக்கு இந்தி தெரியாது என அண்ணாமலை சொன்னார், அதுதான் நேருவின் பெருமை, அமித்ஷா சொல்வது போல கேட்டிருந்தால், அண்ணாமலையால் உயர்கல்வி கற்க முடிந்திருக்காது என கூறினார்.