137 ஆண்டு விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு பரிதாபமா..? அதுவும் சோனியா காந்தி மீதே..!

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2021, 11:48 AM IST
Highlights

ஆகப்பெரும் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றி வைக்கும்போது அந்தக் கொடி அவர் மீதே விழுந்தது தான் பரிதாபம்.
 

காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஏற்றிவைத்தபோது, காங்கிரஸ் கொடி கீழே விழுந்தது பரிதாபமாக பார்க்கப்படுகிறது. 

 இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். 1885ல் தொடங்கப்பட்ட கட்சி. இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற கட்சி.1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட கட்சி. தற்போது பல மாநிலங்களை ஆளும் கட்சி. அந்தக் கட்சிக்கு தற்போது இறங்குமகாக உள்ளது. 

ஆகப்பெரும் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றி வைக்கும்போது அந்தக் கொடி அவர் மீதே விழுந்தது தான் பரிதாபம். காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137வது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

காங்கிரஸ் கொடியை கீழே விழாமல் பிடித்துள்ளார் சோனியா காந்தி..

தேசிய கொடியை தரையில் விழ விட்டவர் அமித்ஷா...... pic.twitter.com/UKyKqsB6H9

— Singaraj D (@CTenkasi)

 

இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, கொடி கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றி வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கொடி கீழே அவரது கைகளில் வந்து விழுந்தது. 

*காங்கிரஸ்* கட்சியின் 137 -வது நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் *சோனியா காந்தி* கட்சி கொடியை ஏற்றி வைத்தபோது, ​​ *காங்கிரஸ் கட்சி கொடி* அறுந்து கீழே விழுந்தது.!
இயற்கை சில நேரங்களில் நமக்கு உணர்த்தும் அதுபோல தான் இதுவும்
காங்கிரஸ் முக்த் பாரத் pic.twitter.com/3zZIf051wY

— MuraliBJP (@muralibjpit)

 

உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கிருந்த தொண்டர்கள் அந்த கொடியை எடுத்து சரி செய்து கொண்டு சென்றனர். பின்னர் வழக்கம் போல் நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் சோனியகாந்தி கலந்து கொண்டார். கட்சி கொடி கீழே விழுந்ததால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது. நூற்றாண்டுகளை கடந்த ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் அந்தக் கொடியை சரியான முறையில் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா? அத்தனை தொண்டர்களும், தலைவர்களும் இருக்கும் போது தங்கள் கட்சியின் கொடி தலைவரால் ஏற்றப்படும்போது எவ்வளவு அஜாக்கிரதையாக ஏற்பாடுகளை செய்திருந்தால் ஏற்றுபவரின் கைகளிலேயே விழுந்திருக்கும். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன-காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி.

— Vigneshmuthu.M (@vigneshMVM)

அது சோனியா காந்தி கொடி ஏத்தும் போது சிம்பாலிக்கா அறுந்து விழ்ந்திடிச்சி.

— VENKATRAMAN. D (@dvenkat71)

 

click me!